61 நாள்மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு மீன்பிடி வலை மேஸ்திரிகள் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மீன்பிடி தடைகால நிவாரணமாக அரிசி வழங்கப்பட்டது இந்தப் பங்களிப்பை டஃப்ரோப்ஸ் நிறுவனமும் அதன் டீலரான கிங் ஃபிஷ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கினோம்.
பாரதிய ஜனதா கட்சியின் SC அணி தேசிய செயலாளர் மரியாதைக்குரிய திரு.வெங்கடேஷ்மெளரியா அவர்கள் இன்று என்னை நேரில் சந்திக்க வருகை புரிந்தப்போது அவர்களிடத்தில் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக பரதவர் இன மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்ககோரிக்கை கொடுத்தோம்
நமது பரதவர் குல வழித்தோன்றல் தலைவர். மாறன் என்ற S வேணுகோபால். முன்னாள் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் நல சங்கத்தில் நினைவஞ்சலி நடத்தினர்.
பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பில் பரதவர் இனத்தைச் சேர்ந்த கும்பகோணம் மேயர் மரியாதைக்குரிய. திரு. சரவணன் அவர்களை எடப்பாடியில் சந்தித்து பரதவரின் உறவுகள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
17/03/2025 அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடியும் அன்னதான நிகழ்ச்சியை நடத்தியும் வாழ்த்து தெரிவித்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது உயிராக கருதும் என் பரதவர் இன சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ISRO CHAIRMAN Dr.V. NARAYANAN அவர்களுக்கு நடத்தப்பட்ட felicitation ceremony நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவு பரிசாக முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை பரிசாக வழங்கியப்போது.
மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு வாரிய உறுப்பினர், சகோதரர் *கொள்ளங்காரி பொல்லையா* அவர்களுடன் *தேசிய பரதவர் அரசாணை*, *மாவீரர் வருணக்குலத்தான் முன்னெடுப்பு* குறித்து ஆந்திர பிரதேஷ் காவாலியில் கலந்தாலோசிக்கபட்டது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே. ஜெயபால் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.