புதுடெல்லியில் இருந்து வருகை புரிந்த அருமை நண்பர் மரியாதைக்குரிய திரு. ஆனந்த் சாகு அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் தேசிய தலைவர் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து வரவேற்றபோது.
3.7.2022 அன்று இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாக்குறிச்சி மீனவர் கிராமத்துக்குச் சென்று இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக நிர்வாகத்தை கட்டமைப்பது நிர்வாகப் பொறுப்பில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களை உரையாற்றி வந்தபோது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா சபையில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்துவது சம்பந்தமான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவித்து தாயகம் திரும்பிய என்னை வாழ்த்தியப்போது.
இன்று சுசர்லாந்து நாட்டிலுள்ள ஐநா சபையில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்துவது சம்பந்தமான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலிருந்து மீனவப் பிரதிநிதிகள் வந்து நமது நியாயமான கோரிக்கையை ஐநா சபையில் நேற்று முன்வைத்தோம்.
04/06/2022 அன்று பரதவர் முன்னேற்ற பேரவை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் ECR கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை பகுதியில் என்கேபி மஹாலில் நடை பெற்ற முனைவர் தி. முத்து கண்ணப்பர் அவர்களுடைய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூல் வெளியீட்டு விழாவின்போது.
பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக முனைவர் தி.முத்து கண்ணப்பர் படைப்பான சங்க இலக்கியத்தில் நெய்தல்நிலம் நூல் வெளியீட்டு விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களுக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த போது.