04/06/2022 அன்று பரதவர் முன்னேற்ற பேரவை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் ECR கல்பாக்கம் அடுத்த காத்தான்கடை பகுதியில் என்கேபி மஹாலில் நடை பெற்ற முனைவர் தி. முத்து கண்ணப்பர் அவர்களுடைய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூல் வெளியீட்டு விழாவின்போது.
பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக முனைவர் தி.முத்து கண்ணப்பர் படைப்பான சங்க இலக்கியத்தில் நெய்தல்நிலம் நூல் வெளியீட்டு விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களுக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த போது.
பரதவர் முன்னேற்றப் பேரவையின் பாம்பன் கிளை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் 20/05/22 அன்று பாம்பனில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பரதவர் முன்னேற்றப் பேரவையின் பாம்பன் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெறுகின்ற அனைத்து மீனவ சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாகவும் கலந்துகொண்டு உரையாற்றியபோது.
பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக இன்று 25/04/2022 மாலை கீழ வைப்பார் கிளை நிர்வாகிகள் அறிமுக கூட்டமும் ஆலோசனை கூட்டமும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர். திரு. செல்வராயன் சாம்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பரதவர்களின் பாரம்பரிய திருவிழா முந்நீர் விழா இவ்விழா இன்று 17.04.2022 பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பில் புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் கடற்கரையில் பரதவர்களின் பாரம்பரிய விழாவினை இளைஞர்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்பட்டது.
தமிழிலே முதன் முதலில் தமிழில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்ற பரதவர் வழித்தோன்றல் முனைவர் தி. முத்துக் கண்ணப்ப செட்டியார் பரதவர் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்திய போது.